PHP and I

June 28, 2007

கவிதையே !

Filed under: கவிதை — Palani raja @ 5:51 am

நான் என்றும்
வாசிக்க விரும்புவது
உன் இதழ் என்னும்
இரண்டடி கவிதையைத் தான்….

ரோஜா

Filed under: கவிதை — Palani raja @ 5:49 am

கூடையில் அழகில்லாத ரோஜா, உன்
கூந்த‌லில் குடியேறிய‌ பின்
அழகான‌து
ஆம்.இருக்கும் இட‌ம்தானே சிறப்பு.

தொலைந்து போனோம்…

Filed under: கவிதை — Palani raja @ 5:42 am

எப்படி சொல்வது?
உன்னை எழுப்பிய
நள்ளிரவு வேளையில்
தூக்கக் கலக்கத்திலும்
வெட்கம் கலந்து
நீ சிரித்த
அந்த சிரிப்பை…

ஒருவழியாய்
வெட்கம் தொலைத்து
அருகில் வந்தமர்ந்த உன்
உச்சி முகர்ந்து
தந்த முத்தத்தில்
தொலைந்து போனேன்…

பேசமுடியாத
ஊமையானேன்…
முதல் ஸ்பரிசம்
என்பதாலோ என்னவோ?

என்னவோ
தெரியவில்லை?
இரவு வந்துவிட்டால்
உனக்குள் ஒரு
அதீத தைரியமும்
வந்து விடுமோ?

மார்பில்
உன் முகம் புதைத்த
போது ஒரு குழந்தையின்
ஸ்பரிசத்தை உணர முடிந்தது…
காமத்திற்கு அங்கு
இடமில்லாமல் போனது…

கற்றை முடி விளக்கி
நீ தந்த முத்தத்தில்
ஒரு தாயின் ஸ்பரிசத்தை
உணர முடிந்தது…
தாரத்தின் வடிவில்
மற்றுமொரு தாய்…

வாடிப்போன
என் இதழ்களுக்கு
புத்துயிர் கிடைத்தது
உன் பூவிரல்களால்
தொட்டு வருடிய போது…

எனக்கே என்
இதழ்களை பிடித்துப்போனது
உன் பூவிதழ்களால்
என் இதழ்கள் நனைத்த போது…

இதுவரை
கண்டிராத சுவையை
கண்டு கொண்டேன்
உன் இதழ்களில்…

இதுவரை
நுகராத வாசனையை
நுகர்ந்தேன்
உன் மேனியில்…

காமம் கண்விழித்து
பால் மாறிப்போனோம்
சற்று நேரத்தில்…
நீ ஆண் பாலாய்…
நான் பெண் பாலாய்…

உன் பயம்
கலந்த ஆக்கிரமிப்பு
என்னை
திக்குமுக்காடச் செய்தது…

முத்தமிட முயலுகையில்
இருவரும் முகம் விலக்கி
விளையாடியதும்…

தழுவலின் போது
புதிய மொழியை
வெளியிட்டதும்…

வெளிச்சத்தில்
உன் நிலா முகம்
பார்க்க முயற்சித்த
என்னை தடுத்ததும்…

இது புதிது தான்
இருவருக்கும்…
இரசிக்கும்படியாகவே இருந்தது
செய்தவைகள் யாவும்…

இருவருமே
எதையோ தேடித் தேடி
தொலைத்து போனோம்
உனக்குள் என்னையும்…
எனக்குள் உன்னையும்…

அவளின் விழிகள்

Filed under: கவிதை — Palani raja @ 5:39 am

அவளின்…..

விழிகள் உறங்கும்
ஒவ்வொரு இரவும்
அமாவாசைதான்! -அன்று,
பவுர்ணமியே என்றாலும்!

அவளின்…..

விழிகளின் மேலே
வளைந்திருக்கும்
ஒற்றை நிறத்தில்
வில்களிரண்டு!
அதிசய வானவில்லாய்!

ஆசை!…

Filed under: கவிதை — Palani raja @ 5:33 am

கபடமில்லா உன்
சிரிப்பை காண ஆசை!

கோபத்தில் சிவக்கும் உன்
கன்னங்கள் காண ஆசை!

உதட்டோரம் சிந்தும் உன்
புன்னகை காண ஆசை!

பிடித்த சுவையை ருசிக்கும் உன்
முகபாவனை காண ஆசை!

ஒவ்வாத சுவையை உணரும் உன்
முகபாவனை காண ஆசை!

ஊஞ்சலில் ஆடும் உன்
உருவம் காண ஆசை!

ஆடுகையில் உள்ளப்பூரிப்பில் உன்
செயல் காண ஆசை!

கீழே விழ நேரும்போது உன்
பயம் காண ஆசை!

பயத்தில் உன்
சிரிப்பை காண ஆசை!

திட்டும் போது சுளிக்கும் உன்
முகம் காண ஆசை!

வாய்விட்டு அழமுடியாமல்
கண்ணீர் சிந்துவதை காண ஆசை!

அழுது முடித்து களைத்த உன்
முகம் காண ஆசை!

என்னோடு கோபம் கொண்டும்
திருப்பும் உன் முகம் காண ஆசை!

இத்தனை ஆசைகள்
எனக்கிருந்தும்
இவற்றுள் ஏதேனுமொன்று
உனக்கும் உளதா என
தெரிந்து கொள்ள ஆசை!

புரிந்துகொள்!

Filed under: கவிதை — Palani raja @ 5:31 am

புரிந்துகொள்!
தூக்கம் வரவில்லை என்றால்
உன்னை தாலாட்ட சொல்லுவேன்.

நீயே மௌனமாய் இருந்தால்,
நான் எப்படி தூங்குவது.

மனத்தில் வலி வந்தால்,
உன்னிடம் ஆறுதல் கேட்பேன்.

நீயே வலி தந்தால்,
நான் எங்கே போவது?

ஒரு நாள் புரிந்து கொள்வாய் காதலின் வலி.

அன்று புரிந்து கொள்வாய்
இந்த காதலன் மொழி

New section : கவிதை

Filed under: கவிதை — Palani raja @ 5:30 am

I am going to post all my favorite கவிதை in this section. Please note I am not the author, this is just my personal collection.

Blog at WordPress.com.